ஒகேனக்கல்லில் அதிநவீன பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய பூங்கா திறப்பு

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் தனியார் பங்களிப்புடன் கூடிய அதிநவீன பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காவை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளம் சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பை தொடர்ந்து மேம்பாட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனியார் பங்களிப்புடன் 69 சென்ட் நிலப் பரப்பில் பறவைகள் பூங்கா 70 திரையரங்கம் பலூன் நீர் விளையாட்டு புல் ரைட் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ரெயின்போ வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்கா ஒகேனக்கலில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது போக்கு பூங்காவினை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சாந்தி அவர்கள் நேற்று மாலை திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி என் வி செந்தில் குமார் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வராஜ் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் உமா சங்கர் மாவட்ட உதவி சுற்றுலாத்துறை அலுவலர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story