அம்மன் சிலை மீது அமர்ந்த கிளி

அம்மன் சிலை மீது அமர்ந்த கிளி
X

அம்மன் சிலை மீது அமர்ந்துள்ள கிளி 

சேலம் மணியனூரில்உள்ள கோவிலில் கருமாரியம்மன் சிலை மீது கிளி ஒன்று நேற்று முதல் அமர்ந்து உள்ளது. இதை காண ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
சேலம் மணியனூர் ஹவுசிங் போர்டு பகுதியில் பூங்கா எதிரில் சக்தி கரு மாரியம்மன், பாலமுருகன், சித்தி விநாயகர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை முதல் கரு மாரியம்மன் சிலை மீது பச்சைக்கிளி ஒன்று பறந்து வந்து அமர்ந்துள்ளது. கருவறையை விட்டு கிளி வெளியே வரவில்லை. அம்மன் சிலை மீதே அமர்ந்தே உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மணியனூர், நெத்திமேடு, அன்னதானப்பட்டி, தாதகாப்பட்டி, லைன்மேடு சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அங்கு வந்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து அவர்கள் தரும் பழங்களை கிளி சாப்பிட்டு வருகிறது.

Tags

Next Story