வயிற்று வலியால் அவதிப்பட்ட நோயாளி விஷம் குடித்து தற்கொலை....
வழக்கு பதிவு
வயிற்று வலியால் அவதிப்பட்ட ரத்த சுத்திகரிப்பு நோயாளி விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை. கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல் எல்லைக்குட்பட்ட, அரவக்குறிச்சி தாலுகா, ராஜபுரம், மேற்கு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் வயது 63. பன்னீர் செல்வத்திற்கு கடந்த ஒரு வார காலமாகவே வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும், இவர் ரத்த சுத்திகரிப்பு நோயாளியாகவும் இருந்து வந்துள்ளார்.
இதனிடையே தனக்கு ஏற்பட்ட வயிற்று வலியால் அவதிப்பட்ட பன்னீர்செல்வம், ஏப்ரல் 4-ம் தேதி காலை 8 மணி அளவில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் அறிந்த பன்னீர்செல்வத்தின் மகன் குமரேசன் வயது 37 என்பவர், தனது தந்தையை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு சிகிச்சையில் இருந்து வந்த பன்னீர்செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குமரேசன் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த பன்னீர் செல்வத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்.