புதுக்கோட்டை அருகே வெப்பத்தின் காரணமாக மயக்கம்: ஒருவர் பலி
கோப்பு படம்
புதுக்கோட்டை அருகே வெப்பத்தின் காரணமாக மயக்கம் அடைந்தவர் பலியானர்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரப்பட்டி கல்லுப்பட்டறை அருகே பெருமாநாடு கீழப்பழுவஞ்சி கிராமத்தை சேர்ந்த ரவி வயது 38 என்பவர் சாலை நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அதிக வெப்பத்தின் காரணமாக மயக்கமடைந்து கீழே விழுந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மரணமடைந்தார்.
இந்த நிலையில் மரணம் தொடர்பாக திருக்கோகர்ணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழேந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story