யானை விரட்டியதில் கீழே விழுந்த ஒருவர் உயிரிழப்பு!
ஒருவர் உயிரிழப்பு
யானை விரட்டியதில் கீழே விழுந்த ஒருவர் உயிரிழப்பு. காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.
கோவை:மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவியதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த யானைகள் மலை அடிவாரம் பகுதியிலேயே முகாமிட்டுள்ளன.இந்த யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும் வனத்துறையினர் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று மருதமலை, சோமையம்பாளையம், பகுதியில் 13 யானைகள் முகாமிட்டிருந்த நிலையில் இந்த யானைகளை வனத்துறையினர் அதிகாலை 5.30 மணி அளவில் மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டினர்.இந்நிலையில் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முட்புதரில் யானை நிற்பதாக பாரதியார் பல்கலை காவலாளிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவலாளிகள் சுரேஷ், சண்முகம் ஆகியோர் அங்கே சென்று யானையை விரட்ட முயன்றனர்.அப்போது திடீரென ஒற்றை ஆண் காட்டு யானை அவர்களை தாக்க முயற்சித்து விரட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் யானை இடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடிள்ளனர்.அப்போது இருவரும் கீழே விழுந்துள்ளனர்.இதில் சண்முகம் அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த நிலையில் சுரேஷ் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை யானைகள் நடமாட்டம் குறித்த தகவல் இருந்ததால் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் மீண்டும் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர் எனவும் அதிகாலையில் யானைகளும் வனப் பகுதிக்குள் சென்ற நிலையில் வனப் பணியாளர்கள் யானை கணக்கெடுப்பு பணிக்காக சென்றுவிட்டனர் எனவும் இந்த நேரத்தில் சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்தனர்.யானைகள் நிற்பதை அறிந்த காவலாளிகள் அதனை விரட்ட முயற்சி மேற்கொண்டதில் யானை கோபம் அடைந்து அவர்களை விரட்டியதில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் ஏற்கனவே வனத்தை ஒட்டி பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து ஏற்கனவே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை பின்பற்றாத காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
Next Story