உடல் நலக் குறைவால் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி
காவல்துறை விசாரணை
விருதுநகரில் உடல் நலக் குறைவால் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 41 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே மூலிப்பேட்டி தவசி லிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் இவருடைய மனைவி பெத்தம்மாள் ராமனுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக உடல் பாதிக்கப்பட்டு சுகரும் இருப்பதாக கூறப்படுகிறது மூன்றாம் தேதி வெளியே சென்ற அவர் தனக்கு பிரஷர் அதிகமாக இருப்பதாகவும் தன்னால் வண்டி ஓட்ட முடியவில்லை என தனது மனைவிக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது அதற்கு அவருடைய மனைவி அங்கே இருக்கும்படி கூறியுள்ளார் அதை கேட்காமல் ராமன் ஆமத்தூர் நாட்டார்மங்கலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் ராமனுக்கு தலையில் அடிபட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இது குறித்து ஆமத்துர் காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story