உலக அமைதி வேண்டி தவழ்ந்து சென்ற வடமாநில நபர் பயணம்

உலக அமைதி வேண்டி தவழ்ந்து சென்ற வடமாநில நபர் பயணம்

தவழ்ந்து வந்த பக்தர்

காரைக்குடியில் உலக அமைதி வேண்டி வட மாநில நபர் தவழ்ந்து பயணம் மேற்கொண்டார்.

இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் இராஜகிரி மகாராஜ். இவர், இந்தியாவில் சனாதனத்தின் மரபுகளை எழுப்பவதற்காகவும், நாட்டில் அமைதி, சகோதரத்துவம், போன்றவை மேம்படுவதற்காவும், உலக அமைதிக்காகவும், கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்திரியிலிருந்து தவழ்ந்து செல்லும் பயணத்தை தொடங்கினார்.

சாலையின் ஓரத்தில் கல்லை முன்பாக போட்டு அதன் ஆரம்ப புள்ளியிலிருந்து தவழ்ந்து, தவழ்ந்து செல்கிறார்.

சுமார் 3800 கி.மீ., இலக்காக கொண்ட இவரது பயணம் ராமேஸ்வரத்தில் ஜூலை 15ம் தேதி முடிவடைகிறது. இன்று காரைக்குடியில் அவர் தனது தவழ்ந்து செல்லும் பயணத்தை மேற்கொண்டார்.

Tags

Next Story