தென்காசியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது

தென்காசியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது

கைது

தென்காசியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவன் கோவில் தெருவில் காவல்துறையினர்நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருள்களை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் விசாரணையில் பலவேசம் என்பது மகன் கள்ளபிரான் (71) புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா அவர்கள் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1, 05, 600 மதிப்பிலான 198 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story