வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது

காவேரிப்பட்டிணத்தில் வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

காவேரிப்பட்டிணம் பகுதிகளில் வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம், அண்ணாநகர் மற்றும் பன்னீர்செல்வம் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நகைகள் திருடுபோவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தது.

இது சம்மந்தமாக காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி உட்கோட்டம் காவல் துணைக்கண்காணிப்பாளர் தமிழரசி தலைமையில் காவேரிப்பட்டிணம் காவல் ஆய்வாளர் பாலாஜி ரமணன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் மோகன்ராஜ், பிராபாகரன், முதல் நிலை காவலர் சரவணன் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைத்து மேற்படி சம்பவங்களில் சம்மந்தப்பட்ட நபரை தேடி (cctv) கண்காணிப்பு கேமரா மூலம் தொடர்ச்சியாக கண்காணித்து தீவிரபுலன்விசாரணை மேற்கொண்டதில் மேற்படி சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளி வெங்கடேஷ்குமார் (38) த/பெ. நாகராஜ், ஸ்ரீராமுலு நகர், காவேரிப்பட்டிணம் அஞ்சல், கிருஷ்ணகிரி வட்டம் மாவட்டம் என்பவரை பிப்ரவரி 29 ஆம் தேதி கைது செய்தும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு அவரிடம் இருந்து இரண்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுமார் ரூபாய் 1, 42,000 மதிப்பிலான 113/4 பவுன் எடையுள்ள தங்க நகைகளை கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி எதிரி கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிருஷ்ணகிரி கிளை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்

Tags

Next Story