கரூர் அருகே விபத்தில் சிக்கியவர் உரிய சிகிச்சை வழங்காததால் உயிரிழப்பு

கரூர் அருகே விபத்தில் சிக்கியவர் உரிய சிகிச்சை வழங்காததால் உயிரிழப்பு

காவல் நிலையம் 

கரூர் அருகே விபத்தில் சிக்கியவர் உரிய சிகிச்சை மேற்கொள்ளாததால் உயிரிழந்ததை தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கரூர் மாவட்டம், வேட்ட மங்கலம் அருகே உள்ள மறவா பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் முருகேசன் வயது 49. இவரது மனைவி மாரியம்மாள் வயது 45. முருகேசன் மார்ச் 11ஆம் தேதி இரவு 9 மணி அளவில், வேலாயுதம்பாளையத்தில் இருந்து மறவா பாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

இவர் மறவாபாளையம் பகுதியில் செயல்படும் டாஸ்மார்க் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில், அடையாளம் தெரியாத, வேகமாக வந்த ஒரு டூவீலர், முருகேசன் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த முருகேசனை மீட்டு, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆயினும் சிகிச்சை வேண்டாம் என கூறி வீட்டிற்கு சென்றுள்ளார் முருகேசன். இந்நிலையில் மார்ச் 14ஆம் தேதி வீட்டில் இருந்தபோது உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்தார் மாரியம்மாள். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர்,

உயிரிழந்த முருகேசனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story