மோட்டார் சைக்கிளில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலி

மோட்டார் சைக்கிளில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலி

பைல் படம் 

சோழசிராமணி அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (60). இவர் கபிலர்மலையில் ரைஸ் மில் வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த ஏழாம் தேதி சோழசிராமணியில் உள்ள தனது உறவினரை பார்த்துவிட்டு வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.‌ பின்னர் உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் கபிலர்மலை செல்வதற்காக சோழசிராமணியிலிருந்து மோட்டார் சைக்கிளில் கபிலர் மலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ஜேடர்பாளையம் அருகே உள்ள மாரப்பம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சோமசுந்தரம் நேற்று வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சோமசுந்தரம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சோமசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story