மாரடைப்பால் அவதிப்பட்டவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !
காவல்துறை
மாரடைப்பால் அவதிப்பட்டவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
மாரடைப்பால் அவதிப்பட்டவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, செம்படம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய சவரிதாஸ். வயது 46. ஆரோக்கிய சவரி தாசுக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மார்ச் 26 ஆம் தேதி காலை 7:15 மணி அளவில், செம்படாபாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பு திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து ஆரோக்கிய சவரி தாஸ் மனைவி ஜாய்சி அன்பரசி வயது 46 என்பவர், காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ஆரோக்கிய சவாரி தாஸ் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம் பாளையம் காவல்துறையினர்.
Next Story