அந்த்யோதயா விரைவு ரயிலில் ஏற முயன்ற நபர் தவறி விழுந்து பலி

அந்த்யோதயா விரைவு ரயிலில் ஏற முயன்ற நபர் தவறி விழுந்து பலி
சாத்தூர் ரயில் நிலையம் 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரயில் நிலையத்தில் அந்த்யோதயா விரைவு ரயிலில் ஏற முயன்ற நபர் ரயிலில் தவறி விழுந்து பலியானர்.


சென்னை தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை செல்லும் அந்த்யோதயா விரைவு ரயில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வழியாக தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாகர்கோவில் செல்லும் அந்த்யோதயா விரைவு ரயில் இன்று சாத்தூர் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு சென்ற போது நாகர் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (45) என்பவர் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு ரயில் மூலம் நாகர்கோவில் செல்ல அந்த்யோதயா விரைவு ரயிலில் ஏற முயன்ற தவறி விழுந்து ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தால் சாத்தூர் ரயில் நிலையத்தில் அந்த்யோதயா விரைவு ரயிலில் அரை மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைத்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி ரயில்வே போலீசார் ரயிலில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story