தூத்துக்குடியில் மது பாட்டிலால் தாக்கியவர் கைது

தூத்துக்குடியில் மது பாட்டிலால் தாக்கியவர் கைது

கோப்பு படம் 

தூத்துக்குடியில் போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை மது பாட்டிலால் தாக்கிய நண்பரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி சிதம்பர நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் நாகலிங்கம் (42). கணேசன் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் மகன் இசக்கிமுத்து (26). இவர்கள் இருவரும் நண்பர்கள், கொத்தனார் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 2பேரும் மையவாடி பகுதியில் வைத்து மது குடித்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த இசக்கி முத்து நாகலிங்கத்தை மது பாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் வழக்குப் பதிந்து இசக்கிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story