ரெயில் நிலையத்தில் மயங்கி கிடந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
உயிரிழப்பு
சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கி கிடந்தார். டவுன் போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது. அவரது 2 கால் முட்டி பகுதியில் காயத்தழும்பு உள்ளது. ஊதா கலரில் கட்டம் போட்ட டவுசர் அணிந்து உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
Next Story