டீக்கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது

டீக்கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்  கைது

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில், நவம்பர் 27ஆம் தேதி காலை 11 மணியளவில் வேலாயுதபாளையம் நகரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, மலைவீதி ரவுண்டானா பகுதியில், வெல்கம் டீ ஸ்டால் என்ற பெயரில் டீக்கடை நடத்தி வரும், நாமக்கல் மாவட்டம், மோகனூர், கே.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் 40., என்பவர் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட தெரியவந்தது. அவரது கடையில் சோதனை இட்டபோது, விற்பனைக்கு வைத்திருந்த கூல் லிப் 88 பாக்கெட், பி ஒன் பாக்கு 20 பாக்கெட்டும், ஹான்ஸ் 40 பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த புகையிலை பொருட்களின் எடை அளவு 14 கிலோ 584 கிராம் இருந்தது. இதனுடைய சந்தை மதிப்பு ரூபாய் 31,320 என மதிப்பீடு செய்த காவல்துறையினர், இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ரமேஷை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story