கோவில் பூஜைக்கு வைத்த மதுவில் விஷம் கலந்தவர் கைது
கோவில் பூஜைக்கு வைத்த மதுவில் விஷம் கலந்தவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வடலிவிளை பகுதியை சேர்ந்தவர் அருள் (33). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் கோவில் நிர்வாகம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பாக காவல் நிலையம் வரை சென்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள மாடன் கோவிலில் கடந்த ஒன்றாம் தேதி பூஜை நடந்தது. இந்த பூஜையின் போது படையலில் மது வைக்கப்பட்டிருந்தது. அந்த மதுவை அருள் குடிப்பதற்காக எடுத்து சென்றார். அப்போது அவருடைய நண்பர் வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (47) என்பவர் அருளுடன் சேர்ந்து அந்த மதுவை குடித்தனர். இதில் செல்வகுமார் இறந்தார். அருள் ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். உடல் பிரேத பரிசோதனையில் மதுவில் விஷம் கலந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் கோயிலில் பூஜைக்கு வைத்த மதுவில் விஷம் கலந்தது யார் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதி சேர்ந்த அஜி என்ற சதீஷ் 46) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் திட்டமிட்டு மதுவில் விஷம் கலந்தது ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். எந்த சம்பந்த தொடர்பாக அஜி அளித்த வாக்குமூலத்தில் ,அஜியும் அருளும் ஒரே கோயிலில் சாமி ஆடுவது வழக்கம். இதனால் கோவில் நிர்வாகம் தொடர்பாக பிரச்சனை வந்ததில் இருந்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அருளை பழிவாங்குவதற்காக மதுவில் தென்னை மர மாத்திரைகளை வாங்கி அஜி கலந்ததாக கூறியுள்ளார். இதை அடுத்து அஜியை போலீசார் நீதிமன்றம் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
Next Story