உடும்பு இறைச்சி வைத்திருந்தவர் கைது !

உடும்பு இறைச்சி வைத்திருந்தவர் கைது !

 கைது

உடும்பு இறைச்சி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து உடும்பு இறைச்சி வேட்டையாட பயன்படுத்தப்பட்ட சுருக்குமடி கம்பிகள் வெட்டுக்கத்தி பறிமுதல் செய்தனர்.
பங்களாப்புதூர் அடுத்த கொங்கர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சடையப்பன் என்பவர் வீட்டில் உடும்பு இறைச்சி வைத்திருப்பதாக டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சடையப்பன் வீட்டை சோதனை செய்து அவரிடம் விசாரணை மேற்க்கொண்டதில் நயினாறப்பன் வனப்பகுதியில் வைத்த சுருக்கு கம்பி வலையில் உடும்பு சிக்கியிருந்ததாகவும் அதை எடுத்து வந்து விற்பனை செய்வதற்காக இறைச்சியாக வைத்திருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இறைச்சி இருப்பது உறுதி செய்யப்பட்டு உடும்பு இறைச்சி வேட்டையாட பயன்படுத்தப்பட்ட சுருக்குமடி கம்பிகள் வெட்டுக்கத்தி ஆகியவை பறிமுதல் செய்து சடையப்பனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story