இராயப்பன்பட்டியில் புகையிலை பாக்கெட்டுகள் கடத்தியவர் கைது

இராயப்பன்பட்டியில் புகையிலை பாக்கெட்டுகள் கடத்தியவர் கைது
காவல் நிலையம் 
இராயப்பன் பட்டியில் போதை புகையிலை பாக்கெட்டுகள் கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே இராயப்பன்பட்டி காவல் நிலைய உதவி சார்பு ஆய்வாளர் சின்னமணி சக போலீசாருடன் ரோந்து சென்ற போது, சின்னஓவுலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டூவீலரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் காஜா முகைதீன், மீரா மைதீன் ஆகிய இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலைகளை கடத்திச் செல்வது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 2355 பாக்கெட்டுகளை கைப்பற்றிய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story