புகையிலை பொருட்களை கடத்திச் சென்ற நபர் கைது

புகையிலை பொருட்களை கடத்திச் சென்ற நபர் கைது

காவல்துறை 

ரூபாய் 43 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்திச் சென்ற நபர் கைது. பொருட்கள் பறிமுதல். காவல்துறை நடவடிக்கை.
ரூபாய் 43 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்திச் சென்ற நபர் கைது. பொருட்கள் பறிமுதல்.காவல்துறை நடவடிக்கை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ்,கூல் லிப், விமல் பாக்கு, வி1 பாக்கு உள்ளிட்ட போதை தரும் பொருட்களை கடத்திச் செல்வதாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மார்ச் 21ஆம் தேதி காலை 10 மணியளவில், அரவக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார் திருநாவுக்கரசு. அப்போது, கரூர் மாவட்டம், மணல்மேடு, பாரதி நகரை சேர்ந்த கந்தசாமி மகன் கிருஷ்ணசாமி என்கிற மணி வயது 40 என்பவர், கொண்டு வந்த பொருட்களை தடுத்து நிறுத்தி சோதனை ஈட்ட போது, அதில் ஹான்ஸ் 645 பாக்கெட்டுகளும், கூல் லிப் 45 பாக்கெட்களும், விமல் பாக்கு 5,760- பாக்கெட்களும், வி1 பாக்கு 5,850- பாக்கெட்டுக்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மதிப்பீடு செய்த போது ரூபாய் 43,050- என தெரியவந்தது. எனவே, போதைப் பொருட்களை கடத்தி வந்த கிருஷ்ணசாமி என்கிற மணியை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story