தடை செய்யப்பட்டார் புகையிலை பொருட்களை விற்றவர் கைது !
புகையிலை பொருட்கள்
ரூபாய் 6,750 மதிப்புள்ள தடை செய்யப்பட்டார் புகையிலை பொருட்களை விற்றவர் கைது.
ரூபாய் 6,750 மதிப்புள்ள தடை செய்யப்பட்டார் புகையிலை பொருட்களை விற்றவர் கைது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக அரவக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மார்ச் 17ஆம் தேதி மதியம் 12: 30- லிருந்து 1- மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அரவக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அரவக்குறிச்சி மஸில் சூப்பர் மார்க்கெட் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விற்பனைக்கு வைத்திருந்த ஒன்றரை கிலோ எடையுள்ள ஐந்து ஹான்ஸ் பவுச் பாக்கெட்களும், 2,730 கிராம் எடை கொண்ட விமல் பாக்கு 35 பவுச் களும், 875 கிராம் எடை கொண்ட வி1 பாக்கு 35 பவுச்களும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட இந்த பொருட்களின் சந்தை மதிப்பு 6,750 ரூபாய் என மதிப்பீடு செய்த காவல்துறையினர், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட அரவக்குறிச்சி,வடக்கு தெருவை சேர்ந்த அப்துல் அக்கீம் மகன் சையது இப்ராஹீம் வயது 53 என்பவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story