தலைவாசலில் பாக்கெட் சாராயம் விற்றவர் கைது
பாக்கெட் சாராயம் விற்றவர் கைது
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் ரயில்வே நிலைய பகுதியில் மொபட்டில் வைத்து சாராயம் விற்று கொண்டிருந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தலைவாசல் அடுத்த மும்முடி எம். ஜி. ஆர். நகரை சேர்ந்த பவுனு (வயது 52) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி வழக்குப்பதிவு செய்து பவுனுவை கைது செய்தார். அவரிடம் இருந்து 105 லிட்டர் பாக்கெட் சாராயம், மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story