புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்தவர் கைது
புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல்
புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த நத்தத்தை சேர்ந்தவர் கைது. மேலும் அவரிடமிருந்து 24 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தத்தில் 24 கிலோ புகையிலை பாக்கெட்களை திங்கட்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர். நத்தத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நத்தம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திங்கட்கிழமை நத்தம்-செந்துறை செல்லும் அவுட்டர் சாலையில் காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி, உதவி ஆய்வாளர் ஜெய்கணேஷ் மற்றும் தனிப்பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள தேனீர் கடையில் விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த நத்தத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 24 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story