அரூரில் செல்போன் திருடியவர் கைது
திருட்டு
அரூர் கச்சேரி மேடு பகுதியில் செல்போன் கடையில் செல்போன் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் ,அரூர் கச்சேரி மேடு பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருபவர் கார்த்திக் இவருடைய கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 20,000 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மாயமானது. கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்த போது கடைக்கு வந்த ஒரு வாலிபர் அந்த செல்போனை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே செல்போனை திருடி சென்ற வாலிபர் அந்த வழியாக நடந்து வந்தார்.கார்த்திக் அந்த வாலிபரை பிடித்து அரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த வாலிபர் கெளகம் பாறையைச் சேர்ந்த வல்லரசு என்பது தெரியவந்தது. அவர் திருடிய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அரூர் காவல்துறையினர், வல்லரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story