மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

காவல் நிலையம் 

பாப்பிரெட்டிபட்டி அருகே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்னைபாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஜம்மனப்பட்டியை சேர்ந்த தீத்தான் என்ற ரஜினி மகன் கவினேஷ் அவருக்கு வயது 20 இவர், அதே பகுதியை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அந்த பெண்ணின் தந்தை ஓடி வந்துள்ளார். அதற்குள் கவினேஷ் தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக மாற்றுத்திறனாளி பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கவினேசை கைது செய்தனர். அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story