ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற நபர்

ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற நபரை மீட்டு விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார்.
கோவை மாவட்டம் பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதிக்கு பட்டா,சிட்டா இல்லாத நிலையில் அதை பெற விண்ணப்பித்துள்ளார். நாமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த திமுக பிரமுகர் நாகராஜன் என்பவர் பட்டா,சிட்டா பெற்று தருவதாக கூறி சண்முகசுந்தரத்திடம் 85 ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டு பட்டா சிட்டா பெற்று தரவில்லை என கூறப்படுகின்றது.இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த சண்முகசுந்தரம் திடீரென தனது உடலில் மண்ணென்னெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு அவர் மீது தண்னீர் ஊற்றினர்.திமுக பிரமுகர் பட்டா,சிட்டா வாங்கி தருவதாக கூறி 85 ஆயிரம் பணம் பெற்று தன்னை மோசடி செய்து விட்டதாகவும் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்று பணத்தை கொடுத்த நிலையில் பைனான்ஸ் நிறுவனம் நெருக்கடி கொடுத்து வருவாதாவும் பட்டா சிட்டா இல்லாத காரணத்தால் நிலத்தையும் விற்க முடியவில்லை என தெரிவித்தார்.இதனையடுத்து சண்முக சுந்தரத்தை மீட்ட பந்தயசாலை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மக்கள் குறை தீர்ப்பு முகாம் நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்றதின் காரணமாக சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags

Next Story