நெல்லை பேருந்து நிலையத்தில் செல்போன் பறிக்க முயன்றவர் கைது
கோப்பு படம்
நெல்லை பேருந்து நிலையத்தில் செல்போன் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம் அருகே உள்ள மாயமான் குறிச்சியை சேர்ந்தவர் பத்திரகாளி. இவர் நேற்று நெல்லைக்கு சென்றுவிட்டு பின்னர் ஊர் திரும்புவதற்காக புதிய பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த ராமையன்பட்டியை சேர்ந்த ராஜன் (28) பத்ரகாளி வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். அங்கிருந்தவர்கள் உடனே அவரை விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
Next Story