கரூர் அருகே காரை திருட முயன்றவர் தவறி கீழே விழுந்து படுகாயம்

கரூர் அருகே காரை திருட முயன்றவர் தவறி கீழே விழுந்து படுகாயம்

காவல் நிலையம் 

கரூர் அருகே காரை திருட முயன்றவர் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, நடையனூர் அருகே உள்ள ஆலமரத்து மேடு பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசன் விவசாயி. ஜனவரி 17ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார் தென்னரசன்.

அப்போது, இவரது வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த காரை, ஈரோடு மாவட்டம், புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி மகன் விமல் பிரகாஷ் வயது 29 என்பவர், காரின் பக்கவாட்டு கண்ணாடி கதவை உடைத்து, காரை திருட முயன்றுள்ளார்.

இந்த சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட தென்னரசன் கூச்சலிட்டு உள்ளார். இதனால், பயந்து போன காரை களவாட வந்த விமல் பிரகாஷ் தப்பி ஓட முயன்று உள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் விமல் பிரகாசுக்கு இடது கால் மற்றும் இரண்டு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் விமல் பிரகாஷை பிடித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், விமல் பிரகாஷை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து,அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story