ஜாமீனில் வெளியே வந்தவர் தூக்கிட்டு தற்கொலை

ஜாமீனில் வெளியே வந்தவர் தூக்கிட்டு தற்கொலை

காவல் நிலையம் 

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள பாலசுந்தரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இளம்பரிதி. இவர் தனது தாய் இளமதியை கீழே தள்ளியால், அவர் உயிர் இழந்த வழக்கில் தா.பழூர் போலீசாரால் கைது செய்யபட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கபட்டார். இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த இளம்பரிதி சம்பவதன்று இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூக்கியுள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது இறந்துபோன அவருடைய தாய் இளமதியின் சேலையில் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனையறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.

Tags

Next Story