கிளியனூர் அருகே முயல் வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி பலி
கிளியனூர் அருகே முயல் வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி பலியானர்.
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள சாந்தி நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 48). இருளர். இவர் நேற்று இரவு தைலாபுரம் ஏரிக்கரை பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றார். அப்போது அவர் எடுத்துச்சென்ற இரும்பு குழாய், ஏரிக்கரை மேலே தாழ்வாக சென்ற மின் கம்பி மீது உரசியதாக கூறப்படுகிறது.
இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே நடராஜன் பரிதாபமாக இறந்துபோனார். இது பற்றி தகவல் அறிந்த கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டில் உள்ள ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முயல்வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags
Next Story