ஏரியில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

ஏரியில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

உயிரிழப்பு 

எருமைப்பட்டி அருகே ஏரியில் குளிக்க சென்ற கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

எருமப்பட்டி அருகே உள்ள வரகூரை சேர்ந்தவர் மதியழகன் மகன் மணி 35 .இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை சுமார் 10. 30 மணி அளவில் வரகூர் செல்லாண்டி அம்மன் கோவில் அருகில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளார் அப்பொழுது ஏரியின் நடுவே சென்றவர் மீண்டும் திரும்ப கரைக்கு வருவதற்கு முயன்றவர் அவரால் வர முடியாமல் தத்தளித்து உள்ளார். அவர் சத்தம் கேட்டு அதன் அருகே 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த அவரது அம்மா சம்பூர்ணம் மற்றும் அவரது மனைவி கவிதா 32 ஆகியோர் காப்பாற்ற சென்றுள்ளனர் .

ஆனால் காப்பாற்ற முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் உதவி உடன் நீரில் மூழ்கிய கணவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் முன்பே இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து எருமைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் இறந்த மணிக்கு கவிதா என்ற மனைவியும் ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

Tags

Next Story