உணவு அருந்திவிட்டு உறங்க சென்றவர் உயிரிழப்பு

உணவு அருந்திவிட்டு உறங்க சென்றவர் உயிரிழப்பு

சங்கரன்கோவிலில் கட்டிடத் தொழிலாளி உணவு அருந்திவிட்டு உறங்க சென்றவர் உயிரிழந்தார்.


சங்கரன்கோவிலில் கட்டிடத் தொழிலாளி உணவு அருந்திவிட்டு உறங்க சென்றவர் உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள ஹோட்டலில் கட்டிட வேலை நடைபெற்று வருகிறது இங்கு நாகர்கோவிலை சேர்ந்த கண்ணையா மகன் தர்மலிங்கம் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பாக தனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு சென்று குடும்பத்தினருடன் இருந்து விட்டு நேற்று மீண்டும் சங்கரன்கோவில் வந்து பணியில் ஈடுபட்டு வந்தார் நேற்று இரவு அருகில் உள்ள ஹோட்டலில் அசைவ உணவு அருந்திவிட்டு தூங்கச் சென்றவர் காலையில் கண் விழிக்கவில்லை இதனை அடுத்து உடன் பணியாற்றுபவர்கள் அவரை எழுப்பியபோது அவர் எழுந்தி றிக்கவில்லை இது குறித்து சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசா சம்பவ இடத்திற்கு வருகை தந்து இறந்த கட்டிட தொழிலாளி தர்மலிங்கத்தின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இராமலிங்கத்தின் மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story