வைகை மகளிர் நலச்சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

வைகை மகளிர் நலச்சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

 மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வைகை மகளிர் நலச்சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் போடி மேலச்சக்கநாதபுரம் வைகை மகளிர் நலச்சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர் அதில் ஆதிதிராவிடர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 52 நபர்களுக்கு வீட்டு மனை பட்டா மேல சொக்கநாதபுரம் 255 படி 63.5 ஏக்கரில் உள்ள நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டியது சம்பந்தமாக பல செய்தும் புறக்கணிக்கப்பட்டு வருகிறோம் ஆகவே கோடி கிராமம் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் புல எண் 328 பட்டா எண் 3516 இந்த எண்ணில் பூமி தான இடம் இருக்கிறது ஆகவே அந்த இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்களாகிய எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் . என்று வைகை மகளிர் நலச்சங்கம் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் இதில் 60 பெண்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் போடி நகர செயலாளர் ஆதித்தமிழர் பேரவை மாவீரன் கலந்து கொண்டார் .

Tags

Next Story