தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி

தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி

புகைப்பட கண்காட்சியை பார்க்கும் மக்கள்

புதுக்கடை பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

புதுக்கடை பேரூராட்சிக் குட்பட்ட, புதுக்கடை பேருந்து நிலையத்தில் நேற்று தமிழ்நாடு அர சின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர் புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான, முதலமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக் களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள் ளுபடி திட்டம்,நரிக்குரவர்கள் மற் றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங் கியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக் கப்பட்டதை நேரில் பார்வையிட்டது, இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம், விவ சாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் குறித்து பொது மக்கள் அறிந்து கொள் ளும்வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

து போல் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்,நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப் புத்திட்டம், காணி பழங் குடியினர்களுக்கு நில உரிமை ஆணை வழங் கியது, மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கி யது, முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், புதியவேளாண் காடு வளர்ப் புத் திட்டம், உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின் போது காலமானவர்க ளின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியது,பள்ளி மாணவ, மாண வியர்களுக்கு இலவச மிதி வண்டிகள் வழங்கியது, காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகை யில் காட்சிப்படுத்தப் பட்டது. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த இந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.

Tags

Next Story