ஈரோட்டில் ஜவுளிப் பூங்கா அமைக்க திட்டம்

ஈரோட்டில் ஜவுளிப் பூங்கா அமைக்க திட்டம்

ஈரோட்டில் ஜவுளிப் பூங்கா அமைக்க திட்டம்

ஈரோட்டில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டம்: ஆட்சியர் ஆலோசனை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், துணிநூல்த்துறையின் சார்பில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டம் தொடர்பாக சிறிய தொழில்முனைவோருடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. ஜவுளித் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

அடிப்படை வசதிகள். பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொது பயன்பாட்டுக்கான கட்டிடங்கள் மற்றும் தொழிற்கூடங்கள் என தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது மானியமாக வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களில் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகுவதோடு அதிக அளவில் அன்னியச் செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் என தெரிவித்த ஆட்சியர், தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை அனைத்து ஜவுளித் தொழில்முனைவோரும் பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும். வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், தொழில் முனைவோரின் கருத்துக்களும், ஆலோசனைகளும் பெறப்பட்டன.

Tags

Next Story