சதானந்தபுரத்தில் லோடு வேன் மோதி ஒருவர் காயம் - காவல்துறை வழக்கு பதிவு
காவல்துறை வழக்கு பதிவு
சதானந்தபுரத்தில் லோடு வேன் மோதி ஒருவர் காயம் காவல்துறை வழக்கு பதிவு விருதுநகர் அருகே உள்ள கன்னிச்சேரி பகுதியைச் சார்ந்தவர் மாடசாமி வயது 40. மாடசாமி அவரது மனைவி ஜான்சி ராணி பணிபுரியும் பட்டாசு ஆலைக்கு சென்று சென்று விட்டு சதானந்தபுரம் சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது, விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்த மினி லோடு வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இதில் மாடசாமி காயம் அடைந்த நிலையில் அருகில் இருப்பவர்கள் உதவியுடன் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய மனைவி வச்சகாரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story