வெள்ளகோவில் அருகே காவல்துறை வாகனம் லாரி மீது மோதி விபத்து
விபத்துக்குள்ளான வாகனம்
காங்கேயம் வெள்ளகோவில் திருச்சி-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கடை என்ற இடத்தில் முன்னாள் சென்ற லாரி மீது காவல்துறை வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து ஜெம்புநாதபுரம் காவல்நிலைய குற்றவழக்கில் ஈடுபட்ட 1.சரவணபாண்டி (@) வேதா (31), 2.கிஷோர் (எ) தேன்கூடு (22), 3) மனோஜ் (24) ஆகியோர்களை கோயம்புத்தூர் சிறையில் இருந்து 1) உதவி ஆய்வாளர் பாலமுரளிகிருஷ்ணண். (51), 2.காவலர்கள் கலைச்செல்வன் (40 ), 3.கோகுல் (29) , 4.ஆயுதப்படை காவலர்கள் செல்வக்குமார் (30) ,5.பொன்னரசு (39),6.சார்லஸ் ஸ்டீபன் (29) (வேன் ஓட்டுநர்) உட்பட தொட்டியம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் கோவை மத்திய சிறையில் ஒப்படைக்க காவல் வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
வெள்ளகோவில் ஒத்தக்கடை அருகே அதிகாலை வரும் பொழுது முட்டை ஏற்றிக்கொண்டு முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் சென்ற காவல்துறை வாகனம் கட்டுப்படுத்த முடியாமல் லாரியின் பின் பகுதியில் மோதியது.
இதில் பயணம் செய்த குற்றவாளிகள் 3 பேர் உட்பட ஆயுதப்படை காவலர் பொன்னரசு ஆகியோர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெள்ளகோவில் காவல்துறையினர் அனைவரையும் மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.