மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் ஏட்டு காயம்

மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் ஏட்டு காயம்

காவல்துறை விசாரணை 

சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் ஏட்டு காயம்.
சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் பகுதியில் காரிப்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஏட்டு தங்கராஜ் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக ேமாட்டார் சைக்கிளில் வந்தவர் போலீசார் மீது மோதியதாக தெரிகிறது. இதில் ஏட்டு தங்கராஜ் காயம் அடைந்தார். அவர் வாழப்பாடி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அயோத்தியாப்பட்டணம் கே.எம்.நகரை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் நாகராஜ் (வயது 44) என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story