எஸ்டிபிஐ கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம் கூட்டம் !

எஸ்டிபிஐ கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம் கூட்டம் !
 எஸ்டிபிஐ கட்சி
வாசுதேவநல்லூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் வைத்து எஸ்டிபிஐ கட்சி சார்பாக அரசியல் பயிலரங்கம் கூட்டம் தென்காசி மாவட்ட செயலாளர் நூர் முகம்மது தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு புளியங்குடி நகர செயலாளர் நவாஸ்கான், வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் அப்துல் ஹமீத், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி தலைவர் முகமது கனி மற்றும் சங்கரன்கோவில் நகர் நிர்வாகிகள் மற்றும் வாசு, பாம்பு கோயில், புளியங்குடி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான எஸ்டிபிஐ கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story