பராமரிப்பு இல்லாததால் வறண்டு போன குளம்
வறண்டு போன குளம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பண்ணியாமலை கல்லுகுளத்தில் போதுமான மழைப்பொழிவு இருந்தும் நீர் வழி வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு, பராமரிப்பு இல்லாததால் குளம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. நத்தம் ஒன்றியம் அவிச்சிப்பட்டி ஊராட்சி பண்ணியாமலையில் உள்ளது கல்லு குளம். எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படும் இந்த குளம் பராமரிப்பு இல்லாததால் தற்போது வறண்டு காணப்படுகிறது. கல்லுகுளத்திற்கு வரும் நீர் வழி வாய்க்கால்கள் துார்வாரப்படாமல் உள்ளது. இதை நீர் ஆதாரமாகக் கொண்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Tags
Next Story