பண்ணப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பைக் மீது தனியார் பேருந்து மோதி விபத்து
பெயர் பலகை
ிண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, வடுகப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் விக்னேஷ் வயது 25. இவர், ஜூன் 13ஆம் தேதி மதியம் 3:15- மணி அளவில், பள்ளப்பட்டியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் பண்ணப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, எதிர் திசையில் நாமக்கல் மாவட்டம், அய்யம்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் வயது 57 என்பவர் ஓட்டி வந்த தனியார் பேருந்து, விக்னேஷ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த விக்னேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், திண்டுக்கல்லில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த விக்னேஷின் தாயார் கவிதா வயது 44 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக தனியார் பேருந்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய கணேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.