மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கொடூர முடிவு

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கொடூர முடிவு

பிரகாஷ் 

கண்டாச்சிபுரம் அருகே தனியார் பஸ் கண்டக்டர் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அடுத்த ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கட்டையன் மகன் பிரகாஷ் (வயது 30). தனியார் பஸ் கண்டக்டரான இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஆலம்பாடி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரது மகள் சிவமதி (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் குழந்தை இல்லை. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த சிவமதி தனது தாய், தந்தையருடன் கடந்த 6 மாதங்களாக சென்னையில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த பிரகாஷ் நாச்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள அவரது மாமனாரின் விவசாய நிலத்தில் உள்ள மாமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கண்டாச்சிபுரம் போலீசார், பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story