சிப்காட்டில் பிரச்னை இல்லா சூழல் உருவாக்கப்படும் - அமைச்சர் முத்துசாமி

சிப்காட்டில் பிரச்னை இல்லா சூழல் உருவாக்கப்படும் - அமைச்சர் முத்துசாமி

அமைச்சர் முத்துசாமி

பெருந்துறை சிப்காட்டை பொறுத்தவரை பாதிப்பு ஏற்பட்ட இடம் தான் என்றும், முதல்வர் நிரந்தர தீர்வுக்கு ஆலோசனை சொல்லி , கடந்த மாதம் 40 கோடி ரூபாய் மதிப்பீல் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளார். பொதுசுத்திகரிப்பு நிலையத்தில் குறைபாடுகள் இருக்கிறது என்பது உண்மை தான். ஓராண்டிற்குள் சிப்காட் பகுதிகளில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை என்ற சூழ்நிலை உருவாக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மை மற்றும் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு , ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சு.முத்துசாமி , பெருந்துறை சிப்காட் பொறுத்தவரை பாதிப்பு ஏற்பட்ட இடம் தான் என்றும் முதல்வர் நிரந்தர தீர்வுக்கு ஆலோசனை சொல்லி , கடந்த மாதம் 40 கோடி ரூபாய் மதிப்பீல் பொதுசுத்திகரிப்பு நிலை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளார் என்றார். பொதுசுத்திகரிப்பு நிலையத்தில் குறைபாடுகள் இருக்கிறது என்பது உண்மை தான் என்ற அமைச்சர் ஓராண்டிற்குள் சிப்காட் பகுதிகளில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை என்ற சூழ்நிலை உருவாக்கப்படும். இதற்கு பொதுமக்களும் , தொழிற்சாலைகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Tags

Next Story