மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி

பெரம்பலூர் வட்டாரத்தில் 66 தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி நடைபெற்றது

பெரம்பலூர் வட்டாரத்தில் 66 தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில், மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் பெரம்பலூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் 66 தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி நடைபெற்றது. சூழலை உறுதிப்படுத்தும் விதமாக இணைவோம் மகிழ்வோம், செயல்பாடுகள். பிப்ரவரி 27ஆம் தேதி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்றது. இதில் துறைமங்கலம் TELC ..நடுநிலைப்பள்ளியி

ல் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தொடக்கநிலை உதவி திட்ட அலுவலர் ரமேஷ், தலைமை வகித்தார் . வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி, வட்டார ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிர் விளையாட்டு, தனி நடிப்பு, பலூன் விளையாட்டு போன்ற போட்டிகள் சாதாரண மாணவர்களுடன் பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களும் குழுவாக இணைந்து போட்டிகள் நடத்தப்பட்டது.

இதன் மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்களின் தனித்திறன் வெளிப்படுத்தப்டுவதுடன் மற்ற மாணவர்களோடு இணைந்து செயல்படும்போது சமவாய்ப்பும், பங்களிப்பும் உறுதி செய்யப்படுகிறது என உதவித்திட்ட அலுவலர் கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியுடன்இணைந்து சிறப்பு பயிற்றுநர்களும் செய்திருந்தனர். இறுதியாக சிறப்பு பயிற்றுநர் மகேஸ்வரி நன்றி கூற இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி முடிவடைந்தது இதேபோல் முன்னதாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் அதிகமாக உள்ள பெரம்பலூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வை வட்டார வளமையும் மேற்பார்வையாளர் தேவகி உள்ளிட்ட அலுவலர்கள் பார்வையிட்டனர்.

Tags

Next Story