ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் கைவிட வலியுறுத்தி போராட்டம்

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் கைவிட வலியுறுத்தி போராட்டம்

மத்திய அரசின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி முதல்வருக்கு விண்ணப்பம் கொடுக்கும் போராட்டம்

மத்திய அரசின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி முதல்வருக்கு விண்ணப்பம் கொடுக்கும் போராட்டம்
சேந்தமங்கலம் அடுத்த திருமலைப்பட்டி பஞ்., மின்வாரியம் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் முதல்வருக்கு விண்ணப்பம் கொடுக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாஜலம், ஜோதி ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பெருமாள் பங்கேற்று, ஸ்மார்ட் மீட்டர் மின்சாரத்தில் பொருத்தக்கூடாது, இலவச மின்சாரம், சலுகை விலை மின்சார உரிமையை பறிக்க கூடாது, 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு 500, 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு விண்ணப்பம் கொடுக்கும் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மத்தியில் ஆளும் ஒன்றிய அனைத்து அரசு மாநில அரசுகளுகளையும் அனைத்து மின் இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டரை பொருத்த வேண்டும் என நிர்பந்திப்பதை கண்டிப்பதாகவும், அதேபோல் தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை மாநில அரசு கைவிட வேண்டும், விவசாயத்திற்கு இலவச மின்சாரம், சலுகை விலை மின்சாரம் திட்டங்களை ரத்து செய்யக்கூடாது, 100 யூனிட் இலவசம் மின்சாரம், நெசவாளர்களுக்கு 500 - 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டங்களை கைவிடக்கூடாது, மின்வாரியத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் மின்சார திருத்த மசோதா சட்டம் 2020 ஐ திரும்ப பெற வேண்டும் என முதல்வருக்கு விண்ணப்பம் அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனிடம் 50க்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்தை வழங்கினர்.

Tags

Next Story