புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவம் உருவாக்கும் முகாம்

பெரம்பலூரில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவம் உருவாக்கும் முகாம் நடைபெற்றது.

பெரம்பலூரில் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புக்கள் 4 கட்டங் களாக மதிப்பீடு செய்யப்பட்டு, தற்போது அடுத்த கட்டமாக, மாணவர்கள் பள்ளிகள் அளவில் சமர்ப்பித்துள்ள கண்டுபிடிப்பிற்கான ஆய்வு இணையதளம் வழியாக நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 5. அணிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த அணிகள் தங்களது கண்டுபிடிப்பினை முன்மாதிரியாக உருவாக்க. மாவட்ட அளவிலான துவக்க முகாமானது (Bootcamp) 07.02.2024 , 08.02.2024 ஆகிய இரண்டு நாட்கள் பெரம்பலூர், கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை), நா.முத்துக்குமார் துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் பங்குபெற்ற வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் இரா. கார்த்திக் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம. ராம்குமார் ஆகியோர் இம்முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story