மேட்டூரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் !

மேட்டூரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் !
பரிசு வழங்குதல் 
சேலம் மாவட்டம் மேட்டூரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேட்டூர் சதுரங்காடியில் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் தலைமை வகித்தார். இலக்கிய அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் ,முனைவர் வைகைச் செல்வன் சிறப்புரை ஆற்றினார் அப்போது பேசிய அவர் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5% உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி. திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என தெரிவித்தனர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. திருப்பூர், பல்லடத்தில் உரையாற்றி பிரதமர் மோடி புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்தார்கள் என தெரிவித்தார். அதேபோல எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி கிடையாது இன்னும் மூன்று நாட்களில் நாடாளுமன்ற கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என எடப்பாடியார் தெரிவித்துள்ளார். இவ்வாறு வைகை செல்வன் பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் புரட்சித்தலைவி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கோலம் போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகரம், ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story