கிரைண்டருக்கு அடியில் பதுங்கி இருந்த சாரைப்பாம்பு சிக்கியது

கிரைண்டருக்கு அடியில் பதுங்கி இருந்த சாரைப்பாம்பு சிக்கியது

பிடிபட்ட சாரைபாம்பு

தூத்துக்குடி துறைமுக ஊழியர் வீட்டுக்குள் புகுந்து கிரைண்டருக்கு அடியில் பதுங்கி இருந்த சாரைப்பாம்பை ஊழியர்கள் பிடித்து காட்டுப் பகுதிக்குள் விட்டனர்.

தூத்துக்குடி துறைமுக ஊழியர் குடியிருப்பு பகுதியில் வீட்டுக்குள் புகுந்து கிரைண்டருக்கு அடியில் பதுங்கி இருந்த சாரைப்பாம்பை துறைமுக தீயணைப்பு ஊழியர்கள் பிடித்து காட்டுப் பகுதிக்குள் விட்டனர் தூத்துக்குடி துறைமுக ஊழியர் குடியிருப்பில் வசித்து வருபவர் பகதூர் ஹர்ஷா இவர் தூத்துக்குடி துறைமுக மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.

இவரது வீட்டில் இன்று காலை கிரைண்டருக்கு அடியில் இருந்து திடீரென உஸ் உஸ் என சத்தம் கேட்டுள்ளது இதைத் தொடர்ந்து துறைமுக ஊழியர் பகதூர் ஹர்ஷா கிரைண்டருக்கு அடியில் எட்டி பார்த்தபோது அங்கே ஒரு சாரைப்பாம்பு இருப்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அலறியபடி வெளியே ஓடிவந்த பகதூர் ஹர்ஷாவின் குடும்பத்தினர் உடனடியாக துறைமுக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் இதையடுத்து விரைந்து வந்த துறைமுக தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடி வீரர் பாட்ஷா ஆகியோர் பகதூர் ஹர்ஷாவின் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர் இதில் கிரைண்டருக்கு அடியில் மறைந்திருந்த சிறிய சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பாட்டில் அடைத்து பின்னர் காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

துறைமுக ஊழியர் குடியிருப்பு பகுதியில் அடர்ந்த காடுகள் புதர் மண்டி கிடப்பதால் அதிலிருந்து பாம்புகள் வெயிலுக்கு வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை பீதி அடைய செய்து வருகிறது

Tags

Next Story