எடப்பாடியர் ஆட்சியில் ஆ.ராசா சிறை செல்வார் - சின்னத்துரை

எடப்பாடியர் ஆட்சியில் ஆ.ராசா சிறை செல்வார் - சின்னத்துரை

அதிமுக ஆர்ப்பாட்டம் 

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா எம்ஜிஆர் பற்றி பேச எந்த ஒரு தகுதியும் இல்லை, தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமையும் போது அவர் சிறைக்கு செல்வார் என அதிமுக அமைப்பு செயலாளர் சின்னுத்துரை தெரிவித்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில், பட்டியல் இன மாணவி மீது வன்கொடுமை தாக்குதல் நடத்திய திமுக எம்.எல்.ஏ வின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை கலந்து கொண்டு பேசும்போது முன்னாள் மத்திய அமைச்சர் ராசா எம்ஜிஆர் பற்றி பேச எந்த ஒரு தகுதியும் இல்லை, அவர் ஒரு மெண்டல். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமையும் போது அவர் சிறைக்கு செல்வார் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story