வீட்டின் பூந்தொட்டியில் பிடிபட்ட அரிதான வெள்ளிக்கோல் வரையான் பாம்பு

வீட்டின் பூந்தொட்டியில் பிடிபட்ட அரிதான வெள்ளிக்கோல் வரையான் பாம்பு

வெள்ளிக்கோல் வரையான் பாம்பு

வீட்டின் பூந்தொட்டியில் பிடிபட்ட அரிதான வெள்ளிக்கோல் வரையான் பாம்பை பத்திரமாக மீட்கபட்டு வனப்பகுதியில் விடப்பட்டது .

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூந்தொட்டியில் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து பாம்பு பிடி வீரரான வன சித்ரன் என்பவருக்கு தகவல் அளிக்கபட்டதை தொடர்ந்து அங்கு வந்த அவர் கூறுகையில் பூந்தொட்டியில் உள்ள பாம்பு விஷமற்ற அரிதாக தென்படும் மரமணு குறைபாடுடைய வெள்ளி கோல் வரையான் பாம்பு என்றும் இதனை ஓநாய் பாம்பு என்று அழைக்கப்படும் என்றார்.

வெள்ளிக்கோல் வரையான் பாம்புகளின் உடலில் தழும்புகள் இல்லாமல் தோல் உரித்தது போல உலாவும் என்றும் இது அரிதாக காணப்படும் எனவும் தெரிவித்தார்.வனத்துறையினரிடம் தகவல் அளிக்கபட்ட பின் பாம்பு மீட்கபட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

பாம்புகள் தென்பட்டால் பொதுமக்கள் அதனை அடிக்கவோ விரட்டவோ கூடாது எனவும் பாம்பு பிடி வீரர்கள்,வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தரும் பட்சத்தில் பத்திரமாக மீட்கப்பட்டு அதன் வாழ்விடத்தில் விடப்படும் என்று பாம்பு பிடி வீரர் சித்ரன் தெரிவித்தார்.

Tags

Next Story